Home Blog இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது ஏன்? தமிழக அரசு விளக்கம்

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது ஏன்? தமிழக அரசு விளக்கம்

0

 

இ-பதிவில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தளா்வுகளுடன் இணைய பதிவு முறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இணைய பதிவு மேற்கொள்வது இன்று முதல் அவசியம் என அறிவிக்கப்பட்டது.

Tamilnadu – E Pass – Apply Online – Step by Step

இதில் தனிநபா்கள் நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும். மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள், திருமணம் ஆகிய காரணிகள் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமணம் என்ற பிரிவை இ-பதிவிற்கான வலைதளத்திலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது.

Tamilnadu – E Pass – Apply Online – Step by Step

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், திருமணம் என்ற பிரிவை தவறாக பயன்படுத்தி பலர் பதிவு செய்து வருகின்றனர். அதிகமான மக்கள் வெளியே வரும் சூழல் எழுந்துள்ளதால் திருமணம் என்ற பிரிவை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version