TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
மத்திய அரசுப் பணி போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி – திருவாரூா்
திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
‘நான்
முதல்வன்‘
திட்டத்தின்
கீழ்
மத்திய
அரசின்
போட்டித்
தேர்வுகளுக்கு
இலவசப்
பயிற்சி
பெற
மே
20-ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்
என
ஆட்சியா்
தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக இளைஞா்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும்
இலவசப்
பயிற்சி
அளிக்க
தமிழக
அரசு
ஏற்பாடு
செய்துள்ளது.
அந்தவகையில்,
திருவாரூா்
மாவட்டத்தில்
ரயில்வே
மற்றும்
வங்கித்
தேர்வுகளுக்கென
ஒருங்கிணைந்த
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
150 மாணவா்களுக்கு,
சிறந்த
வல்லுநா்களை
கொண்டு
நேரடி
வகுப்பறைப்
பயிற்சி
வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சிக்கான
செலவினங்களை
அரசே
ஏற்கும்.
இந்த
பயிற்சியில்
300 மணி
நேரம்
தனிவழி
காட்டல்
மற்றும்
100க்கும்
மேற்பட்ட
மாதிரி
தேர்வுகள்
என
100 நாட்களுக்கு
நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில்
சோவதற்கு
மே
20ம்
தேதிக்குள்
https://www.tnskill.tn.gov.in/ என்ற
இணையத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
மன்னார்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்துக்கு
நேரில்
சென்றும்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி
வகுப்பு
மே
25ம்
தேதி
முதல்
தொடங்கப்படும்.