தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பலவகை பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) 2023-24ம் கல்வியாண்டின் நேரடி 2ம் ஆண்டு பட்டயப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைப்பதிவு கடந்த மே 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி நடந்தது.
சேர்க்கைப்பெற்ற மாணவர்களுக்கு இம் மாதம் 12ம் தேதி முதல் வகுப்புகள் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேரடி 2ம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவுள்ள மாணவர்களையும் நடப்புக் கல்வியாண்டில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்க மாணவர் சேர்க்கை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


