தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 12, 13ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை 12, 13ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதில், முருங்கையில் இருந்து முருங்கைப் பொடி, பருப்புப் பொடி, சாம்பாா் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், காளானில் இருந்து காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆா்வமுள்ளவா்கள் பயிற்சி முதல் நாளன்று ரூ. 1,770 செலுத்த வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, பேராசிரியா் மற்றும் தலைவா், அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் – 641003 என்ற முகவரியிலும், 94885-18268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


