TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சென்னையில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் தயாரிக்கும் பயிற்சி வகுப்பில், அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் உடனடி கலவை பொருட்கள் (இன்ஸ்டன்ட் மிக்ஸ்) தயாரிப்பதற்கான பயிற்சிகள் வரும் ஆக. 4-ம் தேதி வழங்கப்படவுள்ளன.
இந்த பயிற்சியில் மசால்வடை மிக்ஸ், அடை மிக்ஸ், சேமியா பாயாசம் மிக்ஸ், ரவா தோசை மிக்ஸ், ரவா இட்லி மிக்ஸ், சிறுதானிய மிக்ஸ் போன்றவற்றுக்கான பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.
இவற்றை அனைத்து தரப்பினரும் நல்ல வாய்ப்பாக கருதி, பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு சென்னை கிண்டி, திருவிக இண்டஸ்டிரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


