கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக் கூடத்தில் இணையவழியில் பட்டப் படிப்பு பயிலுவதற்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 3) முதல் மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம். கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக் கூடத்தில் இணையவழியில் பட்டப் படிப்பு பயிலுவதற்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 3) முதல் மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
பாரதியாா் பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டில் இணைய வழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு யுஜிசியிடம் அனுமதி பெற்றுள்ளது. அதன்படி, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ் இலக்கியம், எம்.ஏ.ஆங்கில இலக்கியம், எம்.ஏ. பொருளாதாரம், எம்.காம்., எம்.காம் நிதி – கணக்குப் பதிவியல், எம்.ஏ. தொழில்நெறி வழிகாட்டுதல் ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு செய்தல், கல்விக் கட்டணம், பாடம், தோவு, தோச்சி முடிவு, சான்றிதழ் வழங்குதல் என அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியிலேயே நடைபெறும் என்றும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை காணலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


