Friday, November 8, 2024
HomeBlogபாரதிதாசன் பற்றி TNPSC-ல் கேட்கப்பட்ட 69 முக்கிய வினா விடைகள்

பாரதிதாசன் பற்றி [2012 – 2024] TNPSC-ல் கேட்கப்பட்ட 69 முக்கிய வினா விடைகள்

பாரதிதாசன் பற்றி [2012 - 2024] TNPSC-ல் கேட்கப்பட்ட வினா விடைகள்
பாரதிதாசன் பற்றி [2012 – 2024] TNPSC-ல் கேட்கப்பட்ட வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

பாரதிதாசன் பற்றி [2012 – 2024] TNPSC-ல் கேட்கப்பட்ட 69 முக்கிய வினா விடைகள்

  1. “பொதுமறையான திருக்குறளில்‌ இல்லாத தில்லை” – ” என்று. திருக்குறளைப்‌ போற்றிப்‌ புகழ்ந்தவர்‌ யார்‌?

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்‌
(C) சுரதா
(D) வாணிதாசன்‌

  1. ‘பெண்‌ எனில்‌ பேதை என்ற எண்ணம்‌ இந்த நாட்டில்‌ இருக்கும்‌ வரைக்கும்‌ உருப்படல்‌ என்பது சரிப்படாது’ – எனப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பசுவய்யா
(C) பாரதிதாசன்‌
(D) நாமக்கல்‌ கவிஞர்‌

  1. ‘கல்வி இல்லாத பெண்கள்‌ களர்நிலம்‌’ என்றவர்‌

(A) நாமக்கல்‌ கவிஞர்‌
(B) சுரதா
(C) பாரதிதாசன்‌
(D) பாரதியார்‌

  1. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) சுரதா
(C) பாரதிதாசன்‌
(D) வாணிதாசன்‌

  1. பாரதிதாசன்‌ ‘குடும்பவிளக்கு’ என்னும்‌ நூலில்‌ எப்பகுதியில்‌ ‘விருந்தோம்பல்‌’ எனும்‌ தலைப்பில்‌ கவிதை படைத்துள்ளார்‌?

(A) ஐந்தாம் பகுதி
(D) முதல் பகுதி
(C) நான்காம்‌ பகுதி
(D) இரண்டாம் பகுதி

  1. பாரதிதாசன்‌ எழுதிய பிசிராந்தையார்‌ என்னும்‌ நாடக நூலுக்குக்‌ கொடுக்கப்பட்ட விருது?

(A) சாகித்திய அகாடமி விருது
(B) குடியரசுத்‌ தலைவர்‌ விருது
(C) சோவியத்‌ நாட்டு விருது
(D) தாமரைத்‌ திரு விருது

  1. பாரதிதாசனார்‌ இயற்றிய நாடக நூல்‌ எது?

(A) கண்ணகி புரட்சிக்‌ காப்பியம்‌
(B) பிசிராந்தையார்‌
(C) சுவரும்‌ சுண்ணாம்பும்‌
(D) பாண்டியன்‌ பரிசு

  1. “வாழ்வினிற்‌ செம்மையயைச்‌ செய்பவன்‌ நீயே” என்ற பாடலைத் தமிழ்‌ வாழ்த்தாக ஏற்றுக்‌ கொண்டுள்ள அரசு எது?

(A) தமிழ்நாடு அரசு
(B) புதுவை அரசு
(C) பிரெஞ்சு அரசு
(D) ஆங்கில அரசு

Answer: (B) புதுவை அரசு

  1. பாரதிதாசன்‌ எழுதிய “பிசிராந்தையார்‌’ என்னும்‌ நூல்‌

(A) கவிதை
(B) உரைநடை
(C) சிறுகதை
(D) நாடகம்‌

Answer: (D) நாடகம்‌

  1. சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல்‌ எது?

(A) பாண்டியன் பரிசு.
(B) பிசிராந்தையார்‌ நாடகம்‌
(C) குடும்ப விளக்கு
(D) பூங்கொடி நாடகம்‌

Answer: (B) பிசிராந்தையார்‌ நாடகம்‌

  1. “உடல் மண்ணுக்கு, உயிர்‌ தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப்‌ பெற்றவர் யார்‌?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) சுரதா
(D) கவிமணி

Answer: (B) பாரதிதாசன்‌

  1. தமிழுக்குத்‌ தொண்டு செய்வோன்‌ சாவதில்லை – இது யார்‌ கூற்று?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கண்ணதாசன்‌
(D) வாணிதாசன்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. “தொண்டு செய்வாய்‌ தமிழுக்குத்‌ துறைதோறுற்‌ துறைதோறுற்‌ துடித்தெழுந்தே’ – என்று தமிழர்களைத்‌ தட்டி எழுப்பியவர்‌ யார்‌?

(A) பாரதியார்‌
(B) திரு.வி.க.
(C) கவிமணி
(D) பாரதிதாசன்

Answer: (D) பாரதிதாசன்

  1. செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம்‌ கொண்ட கவிஞர்‌

(A) சுரதா
(B) பாரதிதாசனார்
(C) பாரதியார்‌
(D) கலைஞர்‌ மு. கருணாநிதி

Answer: (B) பாரதிதாசனார்

  1. “….புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்‌ செல்லாத தில்லை பொதுமறை யாள திருக்குறளில்‌” – எனத்‌ திருக்குறளைப்‌ போற்றியவர்‌

(A) பாரதியார்‌
(B) கவிமணி தேசிக விநாயகம்‌ பிள்ளை
(C) பாரதிதாசன்‌
(D) நாமக்கல்‌ கவிஞர்‌ வெ. இராமலிங்கப்‌ பிள்ளை

Answer: (C) பாரதிதாசன்‌

  1. “நீலவான்‌ மறைக்கும்‌ ஆல்தான்‌ ஒற்றைக்கால்‌ நெடிய பந்தல்‌” — என்ற வரிகளில்‌

“ஒற்றைக்கால்‌ நெடிய பந்தல்‌” எனக்‌ குறிக்கப்பெறுவது எது?

(A) மூங்கில்‌ மரம்‌
(B) தேக்கு மரம்‌
(C) ஆல மரம்‌
(D) அரசமரம்‌

Answer: (C) ஆல மரம்‌

  1. நூல்கள்‌- நூலாசிரியர்கள்‌ – பொருத்துக.

(a) அழகின் சிரிப்பு – 1. நாமக்கல்‌ கவிஞர்‌
(b) தெய்வத் திருமலர்‌ – 2. பாரதியார்‌
(c) பாவியக் கொத்து – 3. பாரதிதாசன்‌
(e) கண்ணன் பாட்டு – 4. பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌

Answer: விடை கண்டுபிடித்து கீழே Comment செய்யவும்

  1. “தொண்டு செய்து பழுத்த பழம்‌ தூயதாடி மார்பில்‌ விழும்‌” – யார்‌ யாரைப்‌ பாடிய வரிகள்‌?

(A) பாரதியார்‌- பெரியாரை
(B) பாரதிதாசன்‌ – பெரியாரை
(C) சுரதா- வீரமாமுனிவரை
(D) மு.மேத்தா- திருவள்ளுவரை

Answer: (B) பாரதிதாசன்‌ – பெரியாரை

  1. பாவேந்தர்‌ பாரதிதாசனால்‌ எழுதப்பட்ட “சாகித்திய அகாதெமிப்‌” பரிசு பெற்ற நாடக நூல்‌ எது?

(A) சேர தாண்டவம்‌
(B) குடும்ப விளக்கு
(C) குறிஞ்சித் திரட்டு
(D) பிசிராந்தையார்‌

Answer: (D) பிசிராந்தையார்‌

  1. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – இது யாருடைய பாராட்டுரை

(A) பாரதிதாசன்‌
(B) பாரதியார்‌
(C) நாமக்கல்‌ கவிஞர்‌
(D) கலிமணி தேசிக விநாயகம்‌

Answer: (A) பாரதிதாசன்‌

  1. “கன்னல்‌ பொருள்‌ தரும்‌ தமிழே நீ ஓர்‌ பூக்காடு: நானோர்‌ தும்பி!” என்று தமிழ்க்‌ காதல்‌ கொண்டு வாழ்ந்தவர்‌ யார்‌?

(A) வரதராசனார்‌
(B) பாரதியார்‌
(C) வாணிதாசன்‌
(D) பாரதிதாசன்‌

Answer: (D) பாரதிதாசன்‌

  1. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ – எனப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) சுரதா
(D) திருவள்ளுவர்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. எளிமையினால்‌ ஒரு தமிழன்‌ படிப்பில்லை யென்றால்‌ இங்குள்ள எல்லாரும்‌ நாணிடவும்‌ வேண்டும்‌. – எனப்‌ பாடியவர்‌?

(A) பாரதிதாசன்‌
(B) பாரதியார்‌
(C) சதா
(D) கண்ணதாசன்‌

Answer: (A) பாரதிதாசன்‌

  1. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ – எனப்‌ பாடியவர்‌ யார்‌?

(A) பாரதியார்
(B) சுரதா
(C) பாரதிதாசன்‌
(D) கண்ணதாசன்‌

Answer: (C) பாரதிதாசன்‌

  1. “தொண்டு செய்து பழுத்தபழம்‌ என்று பாரதிதாசன்‌ போற்றுவது

(A) பாரதியார்
(B) தந்தை பெரியார்‌
(C) காந்தியார்
(D) அண்ணா துரையார்‌

Answer: (B) தந்தை பெரியார்‌

  1. பொருத்துக :

(a) பெருஞ்சித்திரனார்‌ – 1. காவியப்பாவை
(b) சுரதா – 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன்‌ – 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன்‌ ன – 4. தேன்மழை

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

  1. தொண்டு செய்து பழுத்த பழம்‌ தூயதாடி மார்பில்‌ விழும்‌ – இப்பாடல்‌ அடிகள்‌ யார்‌ யாரைப்‌ பற்றிப்‌ பாடியது?

(A) பாரதியார்‌, பெரியாரைப்‌ பற்றிப்‌ பாடியது
(B) பாரதிதாசன்‌, பெரியாரைப்‌ பற்றிப்‌ பாடியது
(C) கவிமணி, இரவீந்திரநாத்‌ தாகூரைப்‌ \ பற்றிப்‌ பாடியது
(D) நாமக்கல்‌ கவிஞர்‌, இரவீந்திரநாத்‌ தாகூரைப்‌ பற்றிப்‌ பாடியது

Answer: (B) பாரதிதாசன்‌, பெரியாரைப்‌ பற்றிப்‌ பாடியது

  1. “குயில்‌’ என்ற இதழை நடத்தியவர்‌

(A) சுரதா
(B) வாணிதாசன்‌
(C) பாரதியார்‌
(D) பாரதிதாசன்‌

Answer: (D) பாரதிதாசன்‌

  1. பொருத்தமான விடையைத்‌ தேர்வு செய்க.

“தெள்ளு தமித்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்‌’ – திருக்குறள்‌ குறித்து இப்படிக்‌ கூறியவர்‌ யார்‌?

(A) திரு.வி.க
(B) ஒளவையார்‌
(C) பாரதியார்‌
(D) பாரதிதாசன்‌

Answer: (D) பாரதிதாசன்‌

  1. பாரதிதாசனார்‌ எச்சிறப்புப்‌ பெயரால்‌ அழைக்கப்படுகிறார்‌

(A) புரட்சிக்‌ கவிஞர்‌
(B) தேசியக் கவிஞர்‌
(C) உவமைக் கலிஞர்‌
(D) கவிக்குயில்‌

Answer: (A) புரட்சிக்‌ கவிஞர்‌

  1. குரிய ஒளி பெறாத செடியும்‌, பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும்‌ வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்‌

(A) பாரதி
(B) சுரதா
(C) பாரதிதாசன்‌
(D) கவிமணி

Answer: (C) பாரதிதாசன்‌

  1. பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ பாடியது

(A). “பழமையிருந்த நிலை கிளியே பாமரர்‌ ஏதறிவர்‌”
(B) “தேனொக்கும்‌ செந்தமிழே! நீ கனி நான்‌ கிளி”
(C) “சத்தியத்தின்‌ நித்தியத்தை நம்பும்‌ யாரும்‌ சேருவீர்‌”
(D) “தோள்கள்‌ உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம்‌ மலர்ச்சோலை”

Answer: (B) “தேனொக்கும்‌ செந்தமிழே! நீ கனி நான்‌ கிளி”

  1. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப்‌ பாடிய கவிஞர்‌ யார்‌?

(A) பாரதி
(B) தாரா பாரதி
(C) சுத்தானந்த பாரதி
(D) பாரதிதாசன்‌

Answer: (D) பாரதிதாசன்‌

  1. பொருத்துக:

(a) எங்கள்‌ பகைவர்‌ எங்கோ மறைந்தார்‌ – 1. கண்ணதாசன்‌ .
(b) பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்‌ – 2. கவிமணி
(c) எல்லாரும்‌ எல்லாமும்‌ பெற வேண்டும்‌ – 3. நாமக்கல்‌ கவிஞர்‌
(d) சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்‌ – 4. பாரதிதாசன்‌

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

  1. எளிமையினால்‌ ஒரு தமிழன்‌ படிப்பில்லை யென்றால்‌ இங்குள்ள எல்லாரும்‌ நாணிடவும்‌ வேண்டும்‌
  • இவ்வடிகள்‌ இடம்‌ பெற்றுள்ள நூல்‌

(A) அழகின் சிரிப்பு
(B) தமிழ்‌ வளர்ச்சி
(C) இளைஞர்‌ இலக்கியம்‌
(D) இருண்ட வீடு

Answer: (B) தமிழ்‌ வளர்ச்சி

  1. “கன்னல்‌ பொருள்‌ தரும்‌ தமிழே நீ ஒர்‌ பூக்காடு; நாணோர்‌ தும்பி!”
  • என்று தமிழின்‌ மீது காதல்‌ கொண்டு பாடிய கவிஞர்‌?

(A) பாரதியார்‌
(B) சுப்புரத்தினம்‌
(C) வெ.இராமலிங்கம்‌ பிள்ளை
(D) சுரதா

Answer: (B) சுப்புரத்தினம்‌

  1. பட்டியல்‌ I உடன்‌ பட்டியல்‌ II ஐப்‌ பொருத்தி, பட்டியல்களுக்குக்‌ கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்‌ தெரிவு செய்க.

பட்டியல்‌ I பட்டியல்‌ II

சிறய்பு அடைமொழிப்‌ பெயர்‌ – பெயர்‌

(a) தமிழ்நாட்டின்‌ இரசூல்‌ கம்சதேவ்‌ – 1. புதுமைப்பித்தன்‌
(b) தமிழ்நாட்டின்‌ மாபசான்‌ – 2. அனுத்தமா
(c) தமிழ்நாட்டின்‌ வால்டர்‌ ஸ்காட்‌ – 3. பாரதிதாசன்‌
(d) தமிழ்நாட்டின்ஜேள்‌ஆஸ்டின்‌ – 4. கல்கி

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

  1. திருக்குறளின்‌ பெருமைகளைப்‌ போற்றி ‘இணையில்லை முப்பாலுக்(கு) இந்நிலத்தே’ எனப்‌ புகழ்ந்து பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) சுரதா
(D) தாரா பாரதி

Answer: (B) பாரதிதாசன்‌

  1. பொருத்துக:

(a) தமிழியக்கம்‌ – 1. பாரதியார்‌
(b) சீட்டுக்கவி – 2. தோலா மொழித்தேவர்‌
(c) சேக்கிழார்‌ பிள்ளைத்தமிழ்‌ – 3. பாரதிதாசன்‌
(d) சூளாமணி – 4. மகா வித்துவான்‌ மீனாட்சி சுந்தரம்‌ பிள்ளை

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

  1. பாரதிதாசன்‌ நூல்களில்‌ பொருந்தாத நூல்‌

(A) குடும்ப விளக்கு
(B) பாண்டியன்‌ பரிசு
(C) இருண்டவீடு
(D) கள்ளோ காவியமோ

Answer: (D) கள்ளோ காவியமோ

  1. பொருத்துக:

(a) புத்தகச்சாலை – 1. வாணிதாசன்‌
(b) தீக்குச்சிகள்‌ – 2. சுரதா
(c) சிக்கனம்‌ – 3. பாரதிதாசன்‌
(d) காடு – 4. அப்துல்ரகுமான்‌

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

  1. குறிஞ்சித்‌ திட்டு’ எனும்‌ நூலை இயற்றியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) சுரதா
(D) கவிமணி

Answer: (B) பாரதிதாசன்‌

  1. “எங்கள்‌ பகைவர்‌ எங்கோ மறைந்தார்‌ இங்குள்ள தமிழர்கள்‌ ஒன்றாதல்‌ கண்டே”

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) வாணிதாசன்‌
(D) கம்பதாசன்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. பொருந்தாத இணையினைக்‌ காண்க

(A) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்‌
(B) “யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌” – கணியன்‌ பூங்குன்றனார்‌
(C) “அரசியல்‌ பிழைத்தோர்க்கு அறம்‌ கூற்றாகும்‌” – இளங்கோவடிகள்‌
(D) “அழுது அடியடைந்த அன்பர்‌” திருமூலர்‌

Answer: (D) “அழுது அடியடைந்த அன்பர்‌” திருமூலர்‌

  1. பாரதிதாசன்‌ வெளியிட்ட இதழ்‌

(A) தேன்மழை
(B) குயில்‌
(C) தென்றல்‌
(D) இந்தியா

Answer: (B) குயில்‌

  1. “இருட்டறையில்‌ உள்ளதடா உலகம்‌” எனத்‌ தொடங்கும்‌ பாடலைப்‌ பாடியவர்‌ யார்‌?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கவிமணி
(D) நாமக்கல்‌ கவிஞர்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. பொருத்துக :

நூல்‌ – ஆசிரியர்‌

(a) பாண்டியன்‌ பரிசு – 1. பாரதியார்‌
(b) குயில்‌ பாட்டு – 2. நாமக்கல்‌ கவிஞர்‌
(c) ஆசியஜோதி – 3. பாரதிதாசன்‌
(d) சங்கொலி – 4. கவிமணி

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

  1. பொருந்தாத இணையைக்‌ கண்டறிக:

(a) பொதுவுடைமை – புதுமைப்பித்தன்‌
(b) தனித்தமிழ்‌ – மறைமலை அடிகள்‌
(c) பேச்சுக் கலை – பேரறிஞர்‌ அண்ணா
(d) புரட்சி – பாரதிதாசன்‌

Answer: (a) பொதுவுடைமை – புதுமைப்பித்தன்‌

  1. ‘வள்ளுவனைப்‌ பெற்றதால்‌ பெற்றதே புகழ்‌ வையகமே’ எனப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கவிமணி
(D) நாமக்கல்‌ கவிஞர்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. கீழுள்ள பாரதிதாசன்‌ நூல்‌ பட்டியலில்‌ பொருந்தாத நூல்‌ எது?

(A) குடும்ப விளக்கு
(B) பாண்டியன்‌ பரிசு
(C) தேன்‌ மழை
(D) குறிஞ்சித் திட்டு

Answer: (C) தேன்‌ மழை

  1. பொருந்தாத இணையினைக்‌ காண்க.

(A) யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ – கணியன்‌ பூங்குன்றன்‌
(B) கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல்‌ கவிஞர்‌
(C) மங்கையராய்ப்‌ பிறப்பதற்கே மாதவம்‌ செய்திடல்‌ வேண்டும்‌ – கவிமணி
(D) தேனொக்கும்‌ செந்தமிழே நீ கனி – பாரதியார்‌

Answer: (D) தேனொக்கும்‌ செந்தமிழே நீ கனி – பாரதியார்‌

  1. கீழ்க்காணும்‌ நூல்களில்‌ பாரதிதாசனால்‌ எழுதப்படாதது எந்த நூல்‌?

(A) இசையமுது
(B) கண்ணகி புரட்சிக்காப்பியம்‌
(C) தமிழியக்கம்‌
(D) தமிழ்ப்பசி

Answer: (D) தமிழ்ப்பசி

  1. திங்களொடும்‌ செழும்பரிதி தன்னோடும்‌ விண்ணோடும்‌ உடுக்களோடும்‌ மங்குகடல்‌ இவற்றோடும்‌ பிறந்த தமிழுடன்‌ பிறந்தோம்‌ நாங்கள்‌ – எனத்‌ தமிழின்‌ பழஞ்‌ சிறப்பினைப்‌ பெருமிதம்‌ பொங்கப்பாடிய கவிஞர்‌

(A) பாரதியார்‌
(B) கண்ணதாசன்‌
(C) சுரதா
(D) பாரதிதாசன்‌

Answer: (D) பாரதிதாசன்‌

  1. “தமிழுக்குத்‌ தொண்டு செய்வோன்‌ சாவதில்லை’ – யார்‌ கூற்று?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கண்ணதாசன்‌
(D) முடியரசன்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. “தமிழுக்குத்‌ தொண்டு செய்வோன்‌ சாவதில்லை’ – யார்‌ கூற்று?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கண்ணதாசன்‌
(D) முடியரசன்‌

Answer: (B) பாரதிதாசன்‌

  1. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்‌’ – இவ்வடியைப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கவிமணி
(D) சுரதா

Answer: (B) பாரதிதாசன்‌

  1. “மணிமேகலை வெண்பா’வின்‌ ஆசிரியர்‌ யார்‌?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) திரு.வி.க.
(D) கவிமணி

Answer: (B) பாரதிதாசன்‌

  1. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ எனப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) சுரதா
(C) பாரதிதாசன்‌
(D) வாணிதாசன்‌

Answer: (C) பாரதிதாசன்‌

  1. “எல்லார்க்கும்‌ எல்லாம்‌ என்றிருப்பதான இடம்‌ நோக்கி நடக்கின்ற திந்தவையம்‌” ‘ எனப்‌ பொதுவுடைமையை விரும்பியவர்‌

(A) கல்யாண சுந்தரம்‌
(B) பாரதிதாசன்‌
(C) முடியரசன்‌
(D) தமிழ்‌ஒளி

Answer: (B) பாரதிதாசன்‌

  1. பொருத்துக.

சிறப்புப்‌ பெயர்களை ஆசிரியர்களோடு பொருத்துக

(a) தேசியக்கவிஞர்‌ – (1) தேசிக விநாயகம்‌ பிள்ளை
(b) புரட்சிக்கவிஞர்‌ – (2) நாமக்கல்‌ கவிஞர்‌
(c) காந்தியக்‌ கவிஞர்‌ – (3) பாரதியார்‌
(d) கவிமணி – (4) பாரதிதாசன்‌

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

  1. தொடரும்‌ – தொடர்பும்‌.

தொடர்‌ – சான்றோர்‌

(a) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே – (1) திருமூலர்‌
(b) உடம்பை வளர்த்தேன்‌ உயிர்‌ வளர்த்தேனே – (2) பாரதிதாசன்
(c) தேனிலே உளறிய செந்தமிழின்‌ சுவைதேறும்‌ சிலப்பதிகாரம்‌ – (3) திருவள்ளுவர்
(d) உள்ளுவதெல்லாம்‌ உயர்வுள்ளல்‌ – (4) கவிமணி

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

  1. தொடரும் – தொடர்பும்

(a) புரைதீர்‌ நல்லறம்‌ போற்றிக்கேண்பின்‌ – (1) பாரதிதாசன்‌
(b) தமிழ்‌ நாட்டின்‌ இரசூல்‌ கம்சதோவ்‌ – (2) சீத்தலைச்‌ சாத்தனார்‌
என்‌ கடன்‌ பணி செய்து கிடப்பதே – (3) ஒளவையார்‌
(d) அணுவைத்‌ துளைத்தேழ்‌ கடலைப்‌ புகட்டி – (4) திருநாவுக்கரசர்‌

Answer: (a) 2, (b)1, (c)4, (d)3

  1. “வள்ளுவனைப்‌ பெற்றதாற்‌ பெற்றதே புகழ்‌ வையகமே” – பாடியவர்‌ யார்‌?

(A) பாரதியார்‌
(B) சுரதா
(C) தாராபாரதி
(D) பாரதிதாசன்

Answer: (D) பாரதிதாசன்

  1. கவிஞா்‌ அவர்தம்‌ இயற்பெயரும்‌ பொருந்துகிற சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

கவிஞர்‌ – இயற்பெயர்‌

(a) கண்ணதாசன்‌ – 1. ராசகோபால்‌
(b) வாணிதாசன்‌ – 2. சுப்புரத்தினம்‌
(c) காதா – 3. எத்திராக
(d) பாரதிதாசன்‌ – 4. முத்தையா

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

  1. பாவேந்தர்‌ என அழைக்கப்படுபவர்‌

(A) பாரதியார்‌
(B) வாணிதாசன்‌
(B) சுப்புரத்தினதாசன்‌
(D) பாரதிதாசன்‌

Answer: (D) பாரதிதாசன்

  1. கீழ்க்கண்டவற்றுள்‌ தவறான இணை எது?

புத்தகம்‌ – ஆசிரியர்‌

(A) பாண்டியன்‌ பரிசு – பாரதிதாசன்‌
(B) ஆலாபனை – அப்துல்‌ ரஹ்மான்‌
(C) அகல்‌ விளக்கு – வரதராசனார்‌
(D) ஜானகிராமன்‌ – அப்பாவின்‌ சினேகிதர்‌

Answer: (D) ஜானகிராமன்‌ – அப்பாவின்‌ சினேகிதர்

  1. கீழ்கண்டவற்றுள்‌ ஆசிரியர்களை அவர்களின்‌ இதழ்களுடன்‌ பொருத்துக :

ஆசிரியர்‌ – இதழ்‌

(a) திரு.வி.க. – தீபம்‌
(b) பாரதியார்‌ – தேசபக்தன்‌
(c) பாரதிதாசன்‌ – விஜயா
(d) நா. பார்த்தசாரதி – குயில்‌

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

  1. கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ பாரதிதாசனிடம்‌ தொடர்பில்லாத நூல்‌ எது?

(A) பாண்டியன்‌ பரிசு
(B) அழகின்‌ சிரிப்பு
(C) மலரும்‌ மாலையும்‌
(D) இருண்ட வீடு

Answer: (C) மலரும்‌ மாலையும்‌

  1. “இன்பத்‌ தமிழ்க்‌ கல்வி யாவரும்‌ கற்றவர்‌ என்றுரைக்கும்‌ நிலை எய்திவிட்டால்‌ துன்பங்கள்‌ நீங்கும்‌, சுகம்‌ வரும்‌ நெஞ்சினில்‌ தூய்மை யுண்டாகிடும்‌, வீரம்‌ வரும்‌” – எனப்‌ பாடியவர்‌ யார்‌?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்‌
(D) சுரதா

Answer: (B) பாரதிதாசன்‌

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -