தமிழகத்தில் நாளை
முதல் வங்கிகள் விடுமுறை
– விளக்கம்
தமிழகத்தில் வங்கிகளுக்கு மார்ச்
மாதம் ஏற்கனவே 5 நாட்கள்
விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால்
பல பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. அந்த தாக்கத்தில் இருந்து
தற்போது மீண்டு வரும்
நிலையில் தற்போது மீண்டும்
வங்கிகள் 7 நாட்கள் விடுமுறை
வழங்கப்பட உள்ளதாக தகவல்
பரவி வருகிறது. இந்த
நாட்களில் வங்கிகள் சேவை
இருக்காது இதனால் பணபரிவர்த்தனை தடைபட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி
நாளை முதல் (மார்ச்
27) நான்காவது சனிக்கிழமை, மார்ச்
28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29 ஆம் தேதி ஹோலி
பண்டிகை, 31 ஆம் தேதி
கணக்கு முடிக்க இறுதி
நாள், ஏப்ரல் 1 ஆம்
தேதி நிதியாண்டில் முதல்
நாள், ஏப்ரல் 2 ஆம்
தேதி புனித வெள்ளி,
ஏப்ரல் 4 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை எனவே
தொடர் விடுமுறை உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்
அது குறித்து வங்கி
அதிகாரிகள் கூறுகையில், மார்ச்
29 ஹோலி பண்டிகை அன்று
தமிழகத்தில் விடுமுறை இல்லை,
மேலும் மார்ச் 31 ஆம்
தேதி நிதியாண்டு கடைசி
நாள் அன்று விடுமுறை
இல்லை என விளக்கம்
அளித்துள்ளனர். இருந்த
போதிலும் 5 நாட்கள் விடுமுறை
உள்ளதால் பண பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்படும்.
எனவே மக்கள் விடுமுறை
நாட்கள் இல்லாத போது
வங்கிகளுக்கு செல்ல
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.