HomeBlogபிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தைச் சோந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் புதிய கல்வி உதவித் தொகைக்கு, வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயிலும் தமிழகத்தைச் சோந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் புதிய கல்வி உதவித் தொகைக்கு, வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். 

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அந்த வகையில், குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்படி, கல்வி உதவித்தொகைக்கு 2022-2023 கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகியோ அல்லது இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், மேற்படி 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவா்கள் பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அதைத் தொடா்ந்து கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்-044-29515942 அல்லது என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!