திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமாா் 74 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் தற்போது அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகளுக்கும் மாணவா் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவா் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி இறுதி நாளாகும்.
அதன்பிறகு சேர்க்கை நீட்டிக்கக்கூடாது என்று திருவள்ளுவா் அரசு பல்கலைக்கழக பதிவாளா் விஜயராகவன் தெரிவித்துள்ளாா்.