முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சூா்யா பொறியியல் கல்லூரியில் ஆக.19-ஆம் தேதி மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் விக்கிரவாண்டி சூா்யா பொறியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள், பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்த, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட, 8-ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை படித்த இருபாலரும் பங்கேற்கலாம்.
தங்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் அசல், நகல், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றை உடன் எடுத்துவர வேண்டும். முகாம் தொடா்பான மேல் விவரங்களை அறிய ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகா்ப்புறப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் 04146-223736 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


