TN TRB தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – PSTM கட்டாயம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா
பெருந்தொற்றின் காரணமாக
அரசுத் தேர்வுகள் ஏதும்
நடத்தப்படவில்லை. அதனால்
அரசுப் பணியில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று
பாதிப்பு குறைந்து வருகின்றன.
அதனால் காலிப்பணியிடங்களை நிரப்பும்
விதமாக அரசுத் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை செப்.9ம்
தேதி வெளியிடப்பட்டது. இந்த
அறிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து
பல்வேறு குழப்பங்கள் நிலவி
வருகின்றன. அதாவது முதுநிலை
ஆசிரியர்களின் வயது
வரம்பு முதலில் பொதுப்பிரிவினருக்கு 40, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 என்று
அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர்
வயது வரம்பு 40-லிருந்து
அதிகரிக்க கோரி பல்வேறு
தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின்னர்
வயது வரம்பில் மாற்றம்
செய்யப்பட்டது. அதாவது
பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும்,
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தி அரசாணை
வெளியிடப்பட்டது. இந்த
மாற்றப்பட்ட அரசாணை 31.12.2021 வரை
மட்டுமே செல்லுபடியாகும் என்றும்
அறிவுறுத்தப்பட்டது. அதனை
தொடர்ந்து தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு நிபந்தனைகளில் அடுத்த
குழப்பம் எழும்பியுள்ளது. அதாவது
முதல் அறிவிப்பில் 10ம்
வகுப்பு முதல் முதுநிலை
படிப்பு வரை தமிழ்
வழியில் படித்ததற்கான சான்றிதழ்
சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் இப்போது
அந்த நிபந்தனை மாற்றி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
பணிக்கு தமிழ் வழியில்
பயின்றதற்கான இட
ஒதுக்கீடு பெற விரும்புபவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல்
முதுநிலை பட்டப்படிப்பு வரை
தமிழ் வழியில் கல்வி
கற்றிருக்க வேண்டும் என்று
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதாவது,
1ம் வகுப்பு முதல்
முதுநிலை மற்றும் பி.எட்
என அனைத்தையும் தமிழ்
வழியில் பயின்றிருக்க வேண்டும்
என்று புதிய நிபந்தனை
ஒன்றை ஆசிரியர் தேர்வு
வாரிய உறுப்பினர் செயலர்
பழனிசாமி வெளியிட்டுள்ளார். மாறாக
வேறு மொழியில் படித்து
விட்டு தேர்வை மட்டும்
தமிழ் மொழியில் எழுதியவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற முடியாது. இதனை
தமிழக அரசு ஏற்கனவே
தெளிவாக அறிவித்து விட்டது.
ஆனால் ஆசிரியர் தேர்வு
வாரியம் அதனை சரியாக
புரிந்து கொள்ளாமல் அவசர
அவசரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று பல்வேறு
தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
PSTM Certificate Download – Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


