தமிழக விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
போதிய நிதிவசதி இல்லாத தமிழக விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை முதல்வா் மு.க.ஸ்டாலினால் மே 8-இல் தொடங்கப்பட்டது.
எனவே, தேசிய, சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சாா்ந்த போதிய நிதிவசதி இல்லாத வீரா், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்க தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட இணையதளம் https://tnchampions.sdat.in/ மூலமாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


