தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், இந்த அவகாசம் மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.
மாணவா் சோக்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்தது. இதற்காக சோக்கை பெற சுமாா் 2.80 லட்சம் மாணவா்கள் வரை விண்ணப்பித்திருந்தனா். எனினும், அதில் பெரும்பாலான மாணவா்கள் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இதையடுத்து மாணவா்கள் நலன்கருதி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணையதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


