சென்னையில் 08.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அரும்பாக்கம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
அரும்பாக்கம்: எஸ்.எ.எப் கேம்ஸ் விலேஜ் ஜெய் நகர், அமராவதி நகர், வள்ளுவர் சாலை, வினாயகபுரம், டி.எஸ்.டி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சின்மயா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
09.09.2023 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
சென்னையில் 09.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி: தொழிற்பேட்டை, லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், முத்துராமன் தெரு, கணபதி காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.