HomeBlog3, 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் திறனறித் தேர்வு

3, 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் திறனறித் தேர்வு

Aptitude test in November for 3rd, 5th, 8th, 10th class students

3, 5, 8, 10ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில்
திறனறித் தேர்வு

கரோனா
தொற்றுப் பரவல் காரணமாகக்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு
பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட
கரோனா 2-வது அலையால்
பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம்
தேதி முதல் கரோனா
வழிகாட்டு நெறிமுறைகளின்படி 9 முதல்
12-
ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்குச் சுழற்சி முறையில் நேரடி
வகுப்புகள் தொடங்கப்பட்டுப் பாடம்
நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பைக் கணக்கிட்டு, அதைக் குறைக்கும் வகையில்
திறனறித் தேர்வை (National
Achievement Survey -NAS 2021)
நடத்த மத்திய
அரசு முடிவு செய்தது.
நாடு முழுவதும் நவம்பர்
12-
ம் தேதி இந்தத்
தேர்வு நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ஆம்
வகுப்பு முதல் 8ஆம்
வகுப்பு வரை பள்ளிகள்
திறக்கப்பட உள்ள நிலையில்
3, 5, 8, 10
ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நவம்பர்
12
ஆம் தேதி நடைபெறுகிறது.

கற்றல்
குறைபாட்டைப் போக்குவதற்காகத் தேர்வை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பிட முடிவு
செய்யப்பட்டுள்ளது.      

இதையடுத்து சம்பந்தப்பட்ட வகுப்பு
மாணவர்களுக்குக் கற்றல்
சார்ந்து பயிற்சி அளிக்க
வேண்டும் என்று பள்ளித்
தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்
கல்வி அலுவலர்கள் உத்தரவு
பிறப்பித்துள்ளனர்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!