முறைகேடுகளைத் தடுக்க
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – TNPSC
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக TNPSC
தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா
பாதிப்பு காரணமாக பொதுப்பணித்துறை காலியிடங்களுக்கான TNPSC தேர்வுகள்
நடைபெறவில்லை. படித்த
இளைஞர்கள் 2022ஆம் ஆண்டு
தொடக்கத்தில் இருந்து
வேலை தேடி வருகின்றனர். இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான கால அட்டவணையை TNPSC தேர்வு
வாரியம் வெளியிட்டது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதன்படி
மே 21ம் தேதி
குரூப் 2, 2A தேர்வு நடைபெறும்
என்றும் அடுத்தகட்ட முதன்மை
தேர்வு செப்டம்பர் மாதம்
நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இளநிலை
உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக
அலுவலர் வரித் தண்டலர்,
நில அளவர், வரைவாளர்
ஆகிய பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 4 & VAO தேர்வு
குறித்த அறிவிப்பு இந்த
மாதம் வெளியாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வின் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அந்த
வகையில் கணினி மூலம்
மட்டுமே மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால், வினாத்தாள் கொண்டு செல்லும் வாகனம்
ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடியும்
தருவாயில் உள்ளது. விரைவில்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என
தேர்வுத்துறை தலைவர்
தெரிவித்துள்ளார்.
sir TNPSC கட் ஆப் மார்க்கை வெளியிட சொல்லுங்க 1st.