தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும், 21ம் தேதி மாவட்ட அளவிலான தொழில் பழகுனர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் வினீத் அறிக்கை:தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும், 21ம் தேதி இம்முகாம் நடக்கிறது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள, தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.இதில், பங்கேற்று தேர்வு பெறுபவர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அறை எண்: 115, இரண்டாவது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர் என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.திருப்பூர், தாராபுரம், உடுமலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை, 99447 -39810, 98947- 83226, 94990- 55700 என்ற எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.