ஏப்ரல் மாதத்திற்குள் பெண் பேருந்து ஓட்டுனர்கள் நியமனம்
பெண்
ஓட்டுனர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் தேசிய தலைநகர் சாலைகளில்
விரைவில் ஓட்டுநர்களாக பணிபுரிவார்கள்.
கிளஸ்டர்
பேருந்துகளில் பெண்
ஓட்டுநர்களுக்கான தகுதியை
எளிதாக்கும் திட்டத்திற்கு டெல்லி
போக்குவரத்துத்துறை நேற்று
ஒப்புதல் அளித்துள்ளது. ஓட்டுநர்
பதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. எனினும் தானியங்கி பேருந்துகளில் மட்டுமே பெண் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்துக்கு துறையின் கூறுகையில்:
ஆண்களை
விட பெண்கள் அதிக
எச்சரிக்கையுடன் வாகனம்
ஓட்டுகிறார்கள். மேலும்
அவர்கள் நகரத்தின் கடற்படையில் சேர ஊக்குவிக்கப்படவேண்டும் என்று
தெரிவிக்கின்றார்கள். போக்குவரத்துக்கு ஆணையர் ஆஷிஷ்
குந்த்ரா தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
நகரின்
கப்பற்படையில் ஒரு
பெண் ஓட்டுநராக உள்ளார்
என்பதை முன்மாதிரியாக கொண்டு
பெண்கள் பேருந்து ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. அனால் பெண் ஓட்டுனர்களை நியமிக்க, குறைந்தபட்சம் ஒரு
மாத பயிற்சியும் சில
பயிற்சி நிறுவனங்களும் நடத்தும்
தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும் என்ற கட்டாய
நிபந்தனை இருக்க வேண்டும்
என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்,
ஆண் மற்றும் பெண்
ஓட்டுனர்களுக்கு கல்வி
தகுதி தேவையில்லை. தற்போது
புராரில் 12 பெண்கள் உரிமம்
பெற்று பயிற்சி பெற
தயாராக உள்ளனர்.