ரயில்வே பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்
ரயில்வேயில் சேர வேண்டும் என்று
பலருக்கு இளம் வயது
கனவு. இப்படிப்பட்டவர்கள் பிளஸ்
2 முடித்தவுடன் குஜராத்
மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள தேசிய ரயில்,
போக்குவரத்து நிறுவனம்
(என்ஆர்டிஐ) எனும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிலலாம்.
இது
நாட்டிலேயே முதல் ரயில்வே
பல்கலைக்கழகமாக 2018-இல்
தொடங்கப்பட்டது.
போக்குவரத்து தொடர்பான கல்வி, பலதரப்பட்ட ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
ரயில்வே போக்குவரத்துத்துறைக்கு சிறந்த
தரமான நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்திலேயே இந்தப்
பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
போக்குவரத்து கல்வித்துறையில் முன்னோடியாக உள்ள இந்தப் பல்கலைக்கழகம், உலகளாவியரீதியில் திறமையான
ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, தனிச்சிறப்பான கற்றல்
அனுபவத்தையும் சூழலையும்
வழங்குகிறது.
உலகம்
முழுவதிலும் உள்ள சிறந்த
பல்கலைக்கழகங்கள், கல்வி
அமைப்புகளுடன் உலகளாவிய,
தேசிய கூட்டாண்மைகளை வளர்ப்பதில் என்ஆர்டிஐ கவனம் செலுத்துகிறது.
வடிவமைப்பு, நடைமுறையில் உள்ள போக்குவரத்து தொடர்பான அறிவு, புதுமைகள்,
ஆராய்ச்சி முன்னேற்றங்கள் ஆகியவை
சார்ந்து இங்கு கல்வித்திட்டம் இருப்பதால், இங்கு படித்தால்
மாணவர்கள் ரயில்வே துறையில்
நல்ல அறிவைப் பெறலாம்.
படித்து முடித்தவுடன் வேலை
கிடைப்பதும் எளிது.
இரு
பாலருக்கும் தனித்தனியே நவீன
விடுதிகள், 100 சதவீதம் வரையில்
உதவித்தொகை, உலகளாவிய கல்வி–
தொழில் கூட்டாண்மை, அதிநவீன
பசுமை வளாகம் போன்ற
நல்ல கட்டமைப்பு வசதிகளோடு,
யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய
கல்வி அமைப்புகளின் வழிகாட்டுதல்களுடன் ரயில்வே பல்கலைக்கழகம் இயங்குகிறது.
இந்தப்
பல்கலைக்கழகத்தில் தற்போது
பி.டெக், பிபிஏ.,
பி.எஸ்சி, முதுநிலைப் படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:
போக்குவரத்து நிர்வாகத்தில் பிபிஏ (3 ஆண்டு), போக்குவரத்து தொழில்நுட்பத்தில் பி.எஸ்.சி
(3 ஆண்டு), பி. டெக்.
ரயில் உள்கட்டமைப்பு பொறியியல்
(4 ஆண்டு), பி.டெக்.
ரயில் அமைப்புகள் மற்றும்
தொடர்பு பொறியியல் (4 ஆண்டு),
பி.டெக். இயந்திர
மற்றும் ரயில் பொறியியல்
(4 ஆண்டு) ஆகிய இளங்கலைப்
படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
போக்குவரத்து நிர்வாகத்தில் எம்பிஏ,
விநியோக சங்கிலி நிர்வாகத்தில் எம்பிஏ, போக்குவரத்து தொழில்
நுட்பம் மற்றும் கொள்கையில் எம்.எஸ்.சி.,
போக்குவரத்து தகவல்
அமைப்புகள் மற்றும் பகுப்பாய்வுகளில் எம்.எஸ்.சி.,
ரயில்வே சிஸ்டம்ஸ் பொறியியல்
மற்றும் ஒருங்கிணைப்பில் எம்.எஸ்.சி.
உள்ளிட்ட முதுகலைப் பாடங்கள்
பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதுதவிர,
ரயில்வே துறையில் பணிபுரிவோருக்காக போக்குவரத்து / தளவாடங்களில் பிஜிடிஎம், போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதி
/ திட்டத்தில் பிஜிடிஎம் ஆகிய
பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தகுதி: இளங்கலைப் படிப்பில்
சேர பிளஸ் 2 தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். முதுகலைப்
படிப்பில் சேர இளங்கலைப்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி.,
எஸ்டி மாணவர்கள் 50 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். 25 வயதுக்குக் குறைவாக
இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பிபிஏ, பிஎஸ்சி திட்டங்களுக்கு தேர்வு என்ஆர்டிஐ யுஜி
நுழைவுத் தேர்வில் மதிப்பெண்
அடிப்படையில் இருக்கும்.
பி.டெக்
தேர்வு. திட்டங்கள் ஜே.இ.இ.
மெயின் தேர்வு 2021-இல்
பெறப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். என்.ஆர்.டி.ஐ
பி.ஜி நுழைவுத்
தேர்வின் அடிப்படையில் முதுநிலை
பாடத்தில் சேர்க்கை பெறலாம்.
மாணவர்கள் எண்ணிக்கை:
பிபிஏ, பிஎஸ்சி திட்டங்களுக்கு 125 மாணவர்களும், மூன்று பி.டெக்
படிப்புகளுக்கும் தலா
60 மாணவர்களும், இரண்டு எம்பிஏ
திட்டங்களுக்கு தலா
60 மாணவர்களும் சேர்க்கப்படஉள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பங்களை என்.ஆர்.டி.ஐ
இணையதளத்தில் ஆன்லைனில்
சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப
கட்டணம் பொது, ஓ.பி.சி
உள்பட பிரிவினருக்கு ரூ.500,
எஸ்சி. எஸ்.டி.
பிரிவினருக்கு ரூ.250
ஆகும்.
விண்ணப்பப் படிவம், கூடுதல் தகவல்கள்,
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவற்றைப் பற்றிய
தகவல்களை https://www.nrti.edu.in/admissionupdates/
என்ற இணையதளத்தில் அறியலாம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிபிஏ,
பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு 2021-ஆம் ஆண்டு
ஜூலை 22 முதல் ஆகஸ்ட்
21 வரைவிண்ணப்பிக்கலாம். பி.டெக்
படிப்புக்கு செப். 15ஆம்
தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுசெப்டம்பரில் நடத்தப்படலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.nrti.edu.in//