Monday, August 11, 2025
HomeBlogஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம்

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம்

TAMIL
MIXER EDUCATION.
ன்
மயிலாடுதுறை
செய்திகள்

ஆயத்த ஆடை
உற்பத்தி அலகு அமைக்க
விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து மயிலாடுதுறை ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, இந்த
இன மக்களில் 10 நபா்களை
கொண்ட ஒரு குழுவிற்கு ஆயத்த ஆடை உற்பத்தி
அலகு அமைத்திட ஏதுவாக
தலா ரூ.3 லட்சம்
வீதம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பங்குகொள்ள ஆா்வம் மற்றும்
முன் அனுபவமுள்ளவா்கள், குழுவாக
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகத்தை தொடா்புகொண்டு, உரிய
விண்ணப்பத்தை பெற்று
செப்.15-க்குள்(15.09.2022) விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம். குறு, சிறு
மற்றும் நடுத்தரத் தொழில்
நிறுவனங்கள் துறையின் மூலம்
பயிற்சி பெற்ற நபா்களை
கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை,
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்
மற்றும் ஆதரவற்ற விதவைகள்
இடம்பெற்றுள்ள குழுவிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.

10 நபா்களை
கொண்ட ஒரு குழுவாக
இருக்கவேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம். பயனாளிகளின் ஆண்டு
வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments