மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு வேளாண்மை துறையின் மூலம் 300எக்டர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் ரூ.60ஆயிரத்தில் பயிர் சாகுபடி செயல் விளக்கத் திடல், மண்புழு உரத்தொட்டி மற்றும் ஒரு கறவைமாடு (அல்லது) 10ஆடுகள் மற்றும் பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவற்றை அமைக்க வேண்டும்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்த விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டம் விவசாயிகள் பயிர் சாகுபடி முறையில் அதிக உற்பத்திக்கான தொழில் நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை மறு சுழற்சி செய்திடவும், கால நிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால் உற்பத்தி மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்கவும் வழி செய்கிறது. மேலும், இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆதி திராவிட சிறு குறு விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதலாக 20சதவீதம் சிறப்பு மானியமாக எக்டேருக்கு ரூ.12ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.42ஆயிரம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


