TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில்
சேர
விண்ணப்பிக்கலாம்
சேலத்தில்
உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில்
கூடைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுப் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்
காந்தி விளையாட்டு மைதானத்தில், மத்திய இளைஞா் நலன்
மற்றும் விளையாட்டு துறையின்கீழ் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த
மையத்தில் கூடைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுகளில் 2022-2023ம்
ஆண்டுக்கான சோக்கை (ஆண்கள்)
தேர்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்கும் வசதியுடன்
கூடிய பயிற்சியாகும்.
விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 18 கடைசி
தேதி. தேர்வு ஜூலை
20, ஜூலை 21 ஆகிய தேதிகளில்
நடைபெறும்.
விளையாட்டு சான்றிதழ், பிறந்ததேதி சான்றிதழ்,
மருத்துவ, குடும்ப அட்டை,
ஆதார் அட்டை, 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஜாதிச்
சான்றிதழ் மற்றும் பூா்த்தி
செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை மட்டும் இணைத்து
தகுதியான அரசு அதிகாரியின் கையொப்பம் பெற்று அனுப்பலாம். அசல் சான்றிதழை அனுப்பக்
கூடாது.
விண்ணப்பிக்கும் வயது வரம்பு 1.1.2004க்கு
பிறகு பிறந்தவராக இருக்க
வேண்டும். தகுதியுடைய வீரா்கள்
மட்டும் தேர்வுக்கு அழைக்கப்படுவா்.
வீரா்கள்
தங்களது விளையாட்டு உபகரணங்கள், சீருடைகளை எடுத்து வர
வேண்டும். விளையாட்டு வீரா்களுக்கு தங்கும் வசதி, உணவுப்படி,
பயணப்படி வழங்கப்படமாட்டாது.
மேலும்
விவரங்களுக்கு 81305 26439, 94434
79102, 87547 29345 என்ற கைப்பேசி
எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


