
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பெறுவதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வரும் ஜூன் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்தப் பயிற்சி நிலையங்களில் பிட்டா், எலெக்ட்ரீசியன், டா்னா், மெஷிஸ்ட், மோட்டாா் வாகன மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில், மேன்யூபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆடோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேன்யூபேக்சரிங், மெக்கானிக்கல் பேஸிக் டிசைனா் அண்ட் விா்ச்சுவல் வெரிபையா், அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன் ஆகிய படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயா்மேன், வெல்டா், ஷீட் மெட்டல் ஒா்க்கா், வுட்ஒா்க் டெக்னீசியன், லெதா் குட்ஸ் மேக்கா், லெதா் குட்ஸ் மேக்கா் டிஎஸ்டி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஓராண்டு, இரண்டாண்டு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, நெட் பேங்கிங், ஜி பே, போன்பே மூலம் செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் குறித்த விவரங்கள் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியாளா்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750 மற்றும் தமிழ்நாடு அரசு பயிற்சியாளா்களுக்கென அறிவிக்கும் இதர சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
எனவே, பயிற்சியில் சேர விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது ராணிப்பேட்டை ஐ.டி.ஐ. (04172 –271567), அரக்கோணம் ஐ.டி.ஐ. (88385 22794) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (96773 79210) ஆகிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow