தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27ம் தேதி விருது வழங்கப்படவுள்ளன.
அதன்படி தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத்துறையால் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் https://tntourismawards.com/ என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.