TAMIL MIXER EDUCATION- ன் முக்கிய செய்திகள்
கல்பனா சாவ்லா
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீர,
தீர செயல்கள் புரிந்த
பெண்கள், கல்பனா சாவ்லா
விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்பனா
சாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து
பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டுக்கான இந்த
விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமுதாயத்தில், துணிச்சலான, தைரியமிக்க சாதனை
புரிந்த பெண்கள் இவ்விருது
பெற விண்ணப்பிக்கலாம்.
மேற்படி
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் உரிய சாதனைச் சான்றுகளுடன் விண்ணப்பங்களை இம்மாதம்
25ம் தேதி மாலை
5 மணிக்குள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன்
அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா
விளையாட்டரங்கம், நாகா்கோவில்.
தொலைபேசி எண்: 04652 – 262060
என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


