TAMIL
MIXER EDUCATION.ன்
தொழில் செய்திகள்
ரெடிமேட் ஆடை
தயாரிப்பு அலகு அமைக்க
விண்ணப்பிக்கலாம் – சிவகங்கை
சிவகங்கை
மாவட்டத்தில் மாறி
வரும் சூழலுக்கு ஏற்ப
நவீன ஆடை சலவையகம்
அமைக்கவும், ரெடிமேட் ஆடை
நிறுவனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் கூறியதாவது:
பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினரை சேர்ந்தவர்கள் சலவையகம்
அமைக்க 10 பேர் கொண்ட
குழுவிற்கு ரூ.3லட்சம்,
ரெடிமேட் ஆடை தயாரிப்பு
அலகிற்கு 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி
உதவி வழங்கப்படும். வயது
20 நிரம்பியவராகவும், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், சீர்மரபினருக்கு வழங்கப்படும்.
சிறு,
குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி
பெற்ற நபர்களை கொண்ட
குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்விதவை, கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
10 பேர்
குழுவாக இருக்க வேண்டும்.
குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1
லட்சத்திற்கு மிகாமல்
இருத்தல் வேண்டும்.
10 பேருக்கும்தையல் தொழில்தெரிவது அவசியம்.
இத்திட்டத்தில் பயன்பெற
விரும்புவோர் சிவகங்கை
மாவட்ட பிற்பட்டோர் நல
அலுவலகத்தில் உரிய
ஆவணத்துடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.