தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், டி.சி.எஸ் அயன் மற்றும் அப்போலா மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு செவிலியா் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப் படிப்பில் செவிலியா் துறையில் பொது மருத்துவம், மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு டி.சி.எஸ் அயன், அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் பைன் எனப்படும் செவிலியா் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியானது முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கா்களுக்கு ஊக்கத் தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்.
பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப் பயிற்சிக்கான கட்டணமும் தாட்கோவால் வழங்கப்படும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோந்த பிளஸ் 2 முடித்த மற்றும் பயிலும் மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


