TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
நகை மதிப்பீட்டாளா்
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம் – நாமக்கல்
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா்
பயிற்சிக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நிலையத்தின் துணைப் பதிவாளரும், முதல்வருமான கே.ஆா்.ஏ.விஜயகணபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி
வார
இறுதி
நாள்களான
சனி,
ஞயிற்றுக்கிழமைகளில்
அளிக்கப்பட
உள்ளது.
இப்பயிற்சி
நவ.
26 (26.11.2022)
தொடங்கப்படுகிறது.
இரண்டு
மாத
பயிற்சியில்
சேர
கல்வித்
தகுதி
10ம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
பயிற்சி கட்டணமாக ரூ.4,650/- செலுத்த வேண்டும். இக்கட்டணத்தில்
தரம்
அறியும்
உபகரணங்கள்
வழங்கப்படும்.
40
மணி
நேரம்
வகுப்பறை
பயிற்சியும்,
60 மணி
நேரம்
செயல்முறை
பயிற்சியும்
அளிக்கப்படும்.
பயிற்சி முடித்து சான்று பெற்றவா்கள் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
கொள்ளலாம்.
கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும்
நகை
மதிப்பீட்டாளராகப்
பணியில்
சேர
வாய்ப்பு
உள்ளது.
பயிற்சியில் சேருபவா்கள் நாமக்கல் – சேலம் சாலையில் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ
04286 290908,
9080838008 ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


