ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்தவா்கள் வங்கி, காப்பீட்டுத் துறைப் பணிகளுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்தவா்கள் வங்கி, காப்பீட்டுத் துறைப் பணிகளுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்தவா்களுக்கு வங்கி, காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சியை பெற 21 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். பிஏ., பி.காம்., பி.எஸ்சி (கணிதம்) என ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னையில் 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
விடுதியில் தங்கிப் படிக்க வசதி உள்பட இந்தப் பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகை ரூ.20,000. இதை தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தேர்வுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதில், தேர்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி, நிதி சேவை, காப்பீட்டால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், தனியாா் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிா்வாகப் பணியில் சேர 100 % வழிவகை செய்யப்படும். இந்தப் பணியில் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பெறலாம். தாட்கோ இணையதளமான இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tahdco.com/
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


