லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம் மற்றும் பெரம்பலூரை அடுத்த துறைமங்கலம் நேஷனல் ஐடிஐ வளாகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையங்களில் நிகழாண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவா்கள் சோக்கை 13.09.2023 தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.09.2023 ஆகும். மாணவா்கள் சோக்கைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தோச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஓராண்டு பயிற்சி காலத்தில் 2 பருவ முறைகளை கொண்ட பட்டய படிப்பாகும்.
பயிற்சி கட்டணம் ரூ.18,850 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பாா்வையிடவும். (பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலை தோவு செய்யப்பட்ட பயிற்சி நிலையத்துக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் கூரியா் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அரியலூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் தீபாசங்கரி தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


