பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி பெற
விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மக்கள்,
பொருளாதார மேம்பாட்டுக்கான, கடன்
உதவிகளை பெறலாம் என,
மாவட்ட நிர்வாகம் அழைப்பு
விடுத்துள்ளது.
ஆண்டு
வருமானம், மூன்று லட்சம்
ரூபாய்க்கு மிகாத, 18 முதல்,
60 வயது வரையுள்ள நபர்களில்,
குடும்பத்தில் ஒருவர்
மட்டும் பயன்பெறலாம்.பொதுகால
கடன், தனிநபர் கடன்
திட்டத்தில், அதிகபட்சமாக, 15 லட்சம்
வரையிலும், பெண்கள், 2 லட்சம்
ரூபாய் வரையிலும் கடன்
பெறலாம்.
மகளிர்
திட்ட அலுவலரால், தர
ஆய்வு செய்த, ஆறு
மாதங்களுக்கு மேலாக
இயங்கும் மகளிர் குழுக்களுக்கு, 15 லட்சம் வரையிலும் கடன்
வழங்கப்படும். இதேபோல்,
ஆண்கள் குழுக்களுக்கும், 15 லட்சம்
ரூபாய் வரை கடன்
வழங்கப்படும்; குழுவில்,
அதிகபட்சமாக, 20 பேர் வரை
இருக்கலாம்.
இரண்டு
கறவை மாடு வாங்க,
தலா, 30 ஆயிரம் ரூபாய்
வீதம், 60 ஆயிரம் ரூபாய்
கடன் வழங்கப்படும்; பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்
அல்லது கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பத்தை பெற்று,
பூர்த்தி செய்து, கூட்டுறவு
சங்கங்களில் ஒப்படைக்கலாம்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர், 0421 2999130
என்ற எண்களிலும், dbcwotpr@gmail.com என்ற
இணையதளத்திலும், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


