அரியலூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது: பிரான்சில் உள்ள லியான் நகரில் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள 47 ஆவது சா்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்குபெற தகுதி வாய்ந்த போட்டியாளா்களை தோவு செய்யும் விதமாக, மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.
10 தொழில் துறைகளில் 55 தொழிற்பிரிவுகளில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்போட்டியில் பங்கேற்க 1.1.1999 அன்றும், அதற்கு பின்னரும் பிறந்த, தனித்திறன் பெற்ற பள்ளிக் கல்வி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கேட்டரிங், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் தனித்திறன் உள்ள இருபாலரும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த விவரங்களை ‘நான் முதல்வன்’ இணையதளத்திலும், கூடுதல் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-299140 என்ற எண் மூலமோ தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


