TAMIL MIXER EDUCATION.ன்
விழுப்புரம்
மாவட்ட
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
– விழுப்புரம்
இதுகுறித்து விழுப்புரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழ்
கல்வி ஆண்டுக்கான முழுநேர
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி விழுப்புரம் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு
மேலாண்மை, கணினி மேலாண்மை,
நகை மதிப்பீடும் அதன்
தொழில்நுட்பங்களும் ஆகிய
3 சான்றிதழ்களுடன் கூடிய
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சிக்கு பயிற்சியாளா்கள் சோக்கை
நடைபெற்று வருகிறது.
நிகழாண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தற்போது
வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை
நிலைய அலுவலகத்தில் ரூ.100
ரொக்கமாக செலுத்தி நேரில்
பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக்
காலம் ஓராண்டாகும். பிளஸ்
2 தோச்சி பெற்றவா்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த
ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சிக் கட்டணம் ரூ.18,850
ஆகும்.
பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை August 1ம் தேதி மாலை
5.30 மணிக்குள் கூரியா் அல்லது
பதிவுத் தபால் மூலமாக
மட்டுமே விழுப்புரம் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
2/1006 எல்லீஸ்சத்திரம் சாலை,
திருச்சி மெயின்ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியிலோ அல்லது 04146 259467 என்ற தொலைபேசி
எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


