TAMIL
MIXER EDUCATION.ன்
புதுச்சேரி செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி
இதுகுறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, முழு நேர
ஓராண்டு கால கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
இதில்
சேர 1-8-2022 அன்று
குறைந்தபட்சம் 17 வயது
நிரம்பியிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு
கிடையாது. மாணவா்கள் பிளஸ்
2 தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப்
பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை,
நிதி மேலாண்மை, நிர்வாகம்,
வங்கியியல், கணக்கியல், தணிக்கை,
கடன் மற்றும் கடன்
சார்பற்ற சங்கங்கள், கூட்டுறவு
மற்றும் இதர சட்டங்கள்,
கணினி மேலாண்மை, நகை
மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய பாடங்கள்
பயிற்றுவிக்கப்பட்டு, முடிவில்
தோச்சி பெற்ற மாணவா்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய
சான்றிதழ், கணினி மேலாண்மை
சான்றிதழ், நகை மதிப்பீடு
அதன் தொழில்நுட்பங்களும் சான்றிதழ்
ஆகிய மூன்று சான்றிதழ்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும்.
இந்தப்
பயிற்சிக்கு புதுவை, தமிழகத்தைச் சோந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர
விரும்புவோர் புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் ரூ.100
செலுத்தி, விண்ணப்பத்தைப் பெற்று,
நிறைவு செய்து நேரடியாக
சோந்து கொள்ளலாம். பயிற்சிக்
கட்டணம் ரூ.18,850 ஆகும்.
இந்தக்
கட்டணம் தோவு, புத்தகம்,
கணினி, நகை மதிப்பீட்டாளா் பயிற்சி மற்றும் இதர
கட்டணங்களை உள்ளடக்கியது. பயிற்சிக்
கட்டணத்தை இரு தவணைகளாக
செலுத்தலாம்.
மேலும்
விவரங்களுக்கு 0413-2220105, 94434
13520 ஆகிய தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.