HomeBlogகூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - புதுச்சேரி
- Advertisment -

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி

Apply for Cooperative Management Training - Puducherry

TAMIL MIXER EDUCATION.ன்
புதுச்சேரி
செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்புதுச்சேரி

இது குறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய மேலாண் இயக்குனர் மணவாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம்
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, முழுநேர ஓராண்டு
கால கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சி வகுப்பு
நடத்துவதற்கு அனுமதி
பெற்றுள்ளது.

இப்பயிற்சியில் சேர புதுச்சேரி, தமிழகத்தை
சேர்ந்த 17 வயது பூர்த்தியடைந்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி
பெற்றவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியை
முடித்தவர்கள், கூட்டுறவுத் துறை, கூட்டுறவு சங்கங்கள்,
கூட்டுறவு வங்கிகள் மற்றும்
நிதி நிறுவனங்களில் பணியில்
சேரும் வாய்ப்புகள் உள்ளன.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
எண்.62, சுய்ப்ரேன் வீதி,
புதுச்சேரி என்ற முகவரியில் 100 ரூபாய் செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை, வரும்
20
ம் தேதிக்குள் இந்த
அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்
விபரங்களை 0413-2220105, 2331408 என்ற
தொலைபேசி எண்கள் மற்றும்
www.pscu.in
என்ற இணையதளம்
மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -