கூட்டுறவு மேலாண்மை
படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை,
காஞ்சிபுரம், திருச்சி, மதுரை,
சேலம், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட
25 இடங்களில் கூட்டுறவு மேலாண்மை
நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டில்
(2021-2022) கூட்டுறவு மேலாண்மை பட்டய
படிப்பில் (Diploma) சேர
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த முழுநேர
படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 17 வயது
பூர்த்தியாகி இருக்க
வேண்டும். அதிகபட்ச வயது
வரம்பு ஏதும் இல்லை.
பயிற்சிக்கான ஒட்டுமொத்த கட்டணம் ரூ.14,850
மட்டும். இப்பயிற்சியின் நிறைவில்,
கணினி மேலாண்மை மற்றும்
நகை மதிப்பீடு பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் சேர்த்து
வழங்கப்படும். விண்ணப்ப
படிவத்தை www.tncu.tn.gov.in
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான
சான்றிதழ்களின் நகல்களுடன் தங்கள் மாவட்டத்தில் உள்ள
கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு கூரியர் அல்லது பதிவு
தபால் மூலம் செப்.
15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் படிப்பு
முடிப்பவர்கள் கூட்டுறவு
வங்கிகள் மற்றும் கூட்டுறவு
சங்கங்களில் இளநிலை உதவியாளர்,
உதவியாளர் போன்ற பணிகளில்
சேரலாம். இதற்கு அந்த
வங்கிகள் மற்றும் சங்கங்கள்
சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வு மூலம்
பணி நியமனம் நடைபெறும்
என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு
மேலாண்மை பட்டயப்படிப்பு முடிப்பவர்கள் கூட்டுறவுவங்கிகள், கூட்டுறவு
சங்கங்களில் இளநிலை உதவியாளர்,
உதவியாளர் போன்ற பணிகளில்
சேரலாம்.
கூட்டுறவு படிப்பில் சேருவது எப்படி?
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


