TAMIL MIXER EDUCATION.ன்
கடலூர்
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
– கடலூர்
கடலூரில்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூரிலுள்ள டாக்டா் எம்ஜிஆா் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு
மேலாண்மை, கல்வி மேலாண்மை
மற்றும் நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய
3 சான்றிதழ்களுடன் கூடிய
கூட்டுறவு மேலாண்மை பட்டய
பயிற்சிக்கான சேர்க்கை
நடைபெற்று வருகிறது.
இதற்கான
விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை டாக்டா்
எம்ஜிஆா் கூட்டுறவு மேலாண்மை
நிலைய அலுவலகத்தில் ரூ.100
செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
நிவா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும்
22ம் தேதி மாலை
5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். பிளஸ் 2 தோச்சி
பெற்றவா்கள், பட்டயப் படிப்பு,
பட்ட மேற்படிப்பு படித்த
இருபாலரும் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சிக் காலம் ஓராண்டாகும்.
கூடுதல்
விவரங்களுக்கு சரவணபவா
கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டக சாலையை 04142 222619
என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here