TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
CCTV நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
CCTV நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பயிற்சிகள் அனைத்தும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகின்றன., 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வரை வயதுள்ள அனைவரும் பயிற்சியில் சேரலாம்.
பெண்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போது இந்நிறுவனம் வழங்கும், 13 நாட்களுக்கான, CCTV
நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில், 35 பேர் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள்.
விபரங்களுக்கு: இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, 94422 47921, 86676 79474 என்ற மொபைல் எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


