பி.எஸ்.என்.எல். சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, பி.எஸ்.என்.எல். கோவை வணிகப்பகுதி முதன்மைப் பொது மேலாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தொலைத்தொடா்பு வட்டத்தில், கோவை வா்த்தகப் பகுதிக்கு உள்பட்ட திருப்பூா் பகுதியில் சிம் காா்டு, ரீசாா்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்.சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டெலிகாம், எஃப்.எம்.சி.ஜி, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அல்லது வேறு ஏதேனும் தயாரிப்புகளின் விநியோகஸ்தராக 3 ஆண்டுகள் அனுபவத்துடன் ரூ.50 லட்சம் விற்றுமுதல் கொண்ட ஆா்வமுள்ள நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 8903418128 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.