TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
பகுதி நேர
இலவச கலைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து, சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தளவாய்பட்டி, திருப்பதி கவுண்டனுார் சாலையில்
உள்ள கலை பண்பாட்டு
மைய வளாகத்தில், மாவட்ட
ஜவகர் சிறுவர் மன்றம்
உள்ளது.
அங்கு
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம்,
ஜிம்னாஸ்டிக் போன்ற
கலைகள், சனி மதியம்,
3.30 மணி முதல், 5.30 மணி
வரை; ஞாயிறு காலை,
10.00 மணி முதல், 12.00 மணி
வரை பயிற்சி அளிக்கப்படும்.
5 முதல்,
16 வயது வரையான சிறுவர்,
சிறுமியர் பயிற்சி பெறலாம்.
குறிப்பாக, பள்ளி செல்லும்
மாணவ, மாணவியர் பயன்பெற,
பகுதி நேர கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கு
கட்டணம் கிடையாது. உறுப்பினர் ஆண்டு சந்தா, 300 ரூபாய்
மட்டும் செலுத்த வேண்டும்.பயிற்சி
பெறுவோர், மாவட்ட, மாநில,
தேசிய போட்டிகளிலும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவற்றிலும் பங்கேற்கலாம்.
பயிற்சி
முன்பதிவு, கடந்த, 19ல்
தொடங்கப்பட்டுள்ளது. தகவலுக்கு,
94871 36256
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.