Join Whatsapp Group

Join Telegram Group

மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

By admin

Updated on:

மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல்
இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

மின்
மோட்டாருடன் கூடிய இலவச
தையல் இயந்திரம் பெற்றிட
சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கடலூர்
மற்றும் விழுப்புரம் மாவட்ட
ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள்
மற்றும் ஜெயின் போன்ற
சிறுபான்மையின சமூகத்தை
சேர்ந்தவர்களுக்கு மின்
மோட்டாருடன் கூடிய இலவச
தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

இந்த
சலுகையை பெற விரும்புபவர்கள் தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும்
தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டுவருமான உச்சவரம்பு ரூ.1,00,000/ ஆக
இருக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக
அரசுமேலும் வயது வரம்பு
20
முதல் 45 வரை இருக்க
வேண்டும். கைம்பெண் மற்றும்
கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்
ஒரு முறை தையல்
இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும்
தையல் இயந்திரம் பெற
7
ஆண்டுகள் கடந்த பின்னரே
தகுதி உடையவராக கருதப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல
அலுவலரிடமிருந்து உரிய
விண்ணப்பங்கள் பெற்று
விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது எனவே உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]