Home Blog அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு

அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு

0

அறிவியல்-ஆசிரியர்-விருதுக்கு-விண்ணப்பிக்கலாம்-தமிழக-அரசு

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவியல் நகரம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரத்தால் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

இதில் 5 ஆசிரியர்கள் தமிழ்வழி பள்ளிகளில் இருந்தும் மற்றும் 5 ஆசிரியர்கள் திறந்தநிலை பிரிவிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்படுவர்.


2022-2023ம் ஆண்டிற்கான பின்வரும் 5 துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, 1. கணிதம், 2. இயற்பியல், 3. வேதியியல், 4. உயிரியல், 5. புவியியல்/கணினிஅறிவியல்/வேளாண் நடைமுறைகள். விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு அறிவியல் நகர அலுவலகத்திற்கு 14.09.2023 அல்லது அதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version