கணினி பயன்பாடு
பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – புதுச்சேரி
இது குறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் கணினி பயன்பாடு
சான்றிதழ் பயிற்சி (சிசிஏ)
வாரத்தில் 5 நாட்கள் காலை
10.00 முதல் மாதியம்
1.00 மணி வரை
மூன்று மாதம் வழங்கப்பட
உள்ளது.
இதற்கான
பயிற்சி கட்டணம் ரூ.4,500.
கணினி அடிப்படைகள், விண்டோஸ்,
எம்எஸ்ஆபிஸ், வேர்ட் எக்ஸ்எல்,
பவர் பாயிண்ட் அக்ஸஸ்
இன்டர்நெட், இ – மெயில்,
பிரிண்டர், ஸ்கேனர் இயக்குதல்,
‘சிடி‘யில் பதிவு
செய்தல் குறித்து பயிற்சி
அளிக்கப்படும்.
மேலும்,
வைரஸ் மற்றும் மென்பொருள் இயக்குதல், கோப்புகள் பராமரித்தல், ஹெச்.டி.எம்.எல்.
வலைப்பக்கம் வடிவமைத்தல், புராஜெக்ட் ஒர்க் ஆகிய பயிற்சிகள் அளிக்கப் படுகிறது.
இப்பயிற்சியில் 10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற அனைவரும் சேரலாம்.
வயது வரம்பு இல்லை.
பயிற்சி வகுப்பு வரும்
மே 2ம் தேதி
துவங்க உள்ளது.சேர
விரும்புவோர் புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை
நேரில் அணுகலாம்.
மேலும்
விபரங்களுக்கு 0413-2331408, 2220105
என்ற எண்களை தொடர்பு
கொள்ளலாம்.