Sunday, August 31, 2025
HomeBlogவாக்காளர் Helpline செயலியின் பயன்பாடுகள்

வாக்காளர் Helpline செயலியின் பயன்பாடுகள்

 

வாக்காளர் Helpline செயலியின் பயன்பாடுகள்

வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம்
பல்வேறு செல்லிடப்பேசி செயலிகளை
பயன்பாட்டுக்குக் கொண்டு
வந்துள்ளது. 

வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான
பணிகளை நேரில் சென்றோ
அல்லது இணையதளம் அல்லது
வாக்காளர் Helpline செயலிகள்
மூலமாகவோ செய்து கொள்ளலாம்.

வாக்காளர்
Helpline செயலியை தேர்தல்
ஆணையம் பல்வேறு சேவைகளை
வாக்காளர்கள் பெறும்
வகையில் வடிவமைத்துள்ளது. அதன்படி,
தங்களது வாக்காளர் எண்,
வாக்காளர் பதிவேற்றம், வாக்காளர்
அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்து கொள்ள, வாக்காளர்
ரசீதை பதிவிறக்கம் செய்து
கொள்ள, புகார்களை பதிவு
செய்ய, தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ள,
வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
பொழுது உண்மையான முடிவுகளை
தெரிந்து கொள்ள வழிவகை
செய்துள்ளது.

நாட்டில்
இதுவரை 1.9 கோடி பேர்
தங்களது செல்லிடப்பேசியில் இந்த
வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை
பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.

இந்த
செயலியைப் பயன்படுத்தி ஒருவர்
தனது வாக்காளர் அடையாள
ரசீதை பதவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தனது செல்லிடப்பேசியில் உள்ள மற்ற
எண்களுக்கு, தனது வாக்காளர்
அடையாள ரசீதை பகிர்ந்து
கொள்ளவும் முடியும்.

புதிய
வாக்காளர்கள் தமது
பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர்
அடையாள அட்டையில் முகவரி
மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

வாக்காளர்
பட்டியலில் பெயரை நீக்கும்
சேவையைப் பெறலாம்.

வாக்காளர்
அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்யலாம்.

வாக்காளர்
அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்த பிறகு, புதிய
வாக்காளர் அட்டைக் கோரி
விண்ணப்பிக்கலாம்.

தங்களது
விண்ணப்பம் எந்த நிலையில்
உள்ளது என்பதை உடனுக்குடன் அறிந்தகொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது புகார்களைப் பதிவு
செய்து கொள்ளவும் வழிவகை
செய்கிறது.

இந்த
வாக்காளர்
Helpline

செயலி மூலம் ஒரு
வாக்காளர் தேர்தல் தொடர்பான
எந்த விதமான புகார்களையும் இங்கு மிக எளிதாகப்
பதிவு செய்யலாம். அந்த
புகார் மீது எந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதிலேயே தெரிந்து கொள்ளலாம்.

தங்கள்
தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் தகவல்கள், பிரமாணப் பத்திரம்
உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தேர்தல்
நேரத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது,
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். கட்சி
வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முடிவுகளை அறியலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments