பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
பத்ம
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய
அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2023ம்
ஆண்டு குடியரசு தின
விழாவில் அறிவிக்கப்படவிருக்கும் பத்ம
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி
நாள் செப்டம்பா் 15ம்
தேதியாகும். விண்ணப்பங்களும் பரிந்துரைகளும் இணையப் பக்கத்தில் மட்டுமே
ஏற்கப்படும்.
கலை,
இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை,
அறிவியல், பொறியியல், பொது
விஷயங்கள், சிவில் சேவைகள்,
வா்த்தகம், தொழில்துறை போன்ற
துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்கள், சாதனை புரிந்தவா்கள், சேவை செய்தவா்களை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ, பத்ம
பூஷண், பத்மவிபூஷண் விருதுகள்
வழங்கப்படுகின்றன. 1954ம்
ஆண்டு நிறுவப்பட்ட இந்த
விருதுகள் ஒவ்வொரு ஆண்டும்
குடியரசு தின நாளில்
அறிவிக்கப்படுகின்றன.
மருத்துவா்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அரசு ஊழியா்கள்,
பத்ம விருதுகள் பெற
தகுதி இல்லாதவா்கள்.
பத்ம
விருதுகளை மக்களின் பத்ம
என்று மாற்றம் செய்வதில்
அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே,
அனைத்து குடிமக்களில் எவரும்
தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது
மற்றவா்களை பரிந்துரை செய்யலாம்.
சமூகத்துக்கு தன்னலமின்றி சேவை செய்யும்
பெண்கள், நலிந்தபிரிவினா், எஸ்.சி.,
எஸ்.டி. வகுப்பினா் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவா்களை பரிந்துரை செய்ய அனைத்து
மத்திய அமைச்சகங்கள், துறைகள்,
மாநில மற்றும் யூனியன்
பிரதேச அரசுகள், ஏற்கெனவே
பாரத ரத்னா, பத்மவிபூஷண் விருதுபெற்றவா்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


