தையல் இயந்திரம்
பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
– கடலுார்
மனவளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள் மோட்டார்
பொருத்தப்பட்ட தையல்
இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்
பாதிக்கப்பட்ட, காதுகேளாத,
வாய்பேசாத, மிதமான மனவளர்ச்சி குறையுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் 75 சதவீத்திற்கும் மேற்பட்ட
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார்
பொருத்திய தையல் இயந்திரம்
வழங்கப்படுகிறது.
நடப்பு
நிதியாண்டிற்கு மாற்றுத்
திறனாளிகளின் தாய்மார்கள் தையல் பயிற்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக
வெள்ளைத் தாளில் விண்ணப்பமும், மாற்றுத்திறனாளி அடையாள
அட்டை நகல் (அனைத்து
பக்கங்களும்) தையல் பயிற்சி
பெற்ற சான்றின் நகல்,
ரேஷன் கார்டு, ஆதார்
கார்டு நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-1, ஆகியவற்றுடன் மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் நல
அலுவலகத்தில் அஞ்சல்
வழியாகவோ அல்லது நேரிலோ
வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.