ஆசிரியர் பட்டய
படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி மாவட்ட
ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசு கல்வித் துறையில்
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கிவரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி
பயிற்சி நிறுவனத்தில் 2021-22-ம்
கல்வி ஆண்டுக்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்புச்
(D.El.Ed) சேர்க்கைக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவ,
மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் மேல்நிலைப் பள்ளித் தேர்வில்
அல்லது அதற்குச் சமமான
தேர்வில் குறைந்த பட்சம்
50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். எனினும் பட்டியல்
இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம்
45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும்.
31.7.2021 அன்று முடிய 29 வயதுக்கு
மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனினும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், பட்டியல் இனத்தவருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை
உண்டு.
சேர்க்கை
விண்ணப்பம் ஆக.12 முதல்
வரும் 31-ம் தேதி
வரை அனைத்து அலுவலக
நாட்களிலும் புதுச்சேரி, லாஸ்பேட்டை, தொல்காப்பியா வீதி,
மாவட்ட ஆசிரியர் கல்வி
பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும். மேலும் https://schooledn.py.gov.in
என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான
நகல் சான்றிதழ்களுடன் வரும்
31-ம் தேதி மாலை
5 மணிக்குள் புதுச்சேரி இலாசுப்பேட்டை, தொல்காப்பியர் வீதி,
மாவட்ட ஆசிரியர் கல்வி
பயிற்சி நிறுவனத் தில்
சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய விரும்புவோர் இணையதளத்தில் உரிய
ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


