தேசிய இளைஞர்
விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய
இளைஞர் விருதுக்கு, நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்வேறு
துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசின்
விளையாட்டு மற்றும் இளைஞர்
மேம்பாட்டுத் துறையால்,
தேசிய இளைஞர் விருது
வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது,
தேசிய முன்னேற்றம் மற்றும்
சமூகப் பணிகளில் இளைஞர்
முன்னேற்றத்திற்கான சுகாதாரம்,
ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, கலாசாரம்,
மனித உரிமைகள் ஊக்குவிப்பு, கலை மற்றும் இலக்கியம்,
சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், செயலாற்றும் குடிமக்கள், சமூக
சேவை, விளையாட்டு மற்றும்
கல்வியில் சிறந்து விளங்குதல், திறன் கற்றலில் சிறந்து
விளங்கும் தனி நபர்
அல்லது அமைப்புக்கு வழங்கப்படும்.
2019-2020ஆம்
ஆண்டிற்கான தேசிய இளைஞர்
விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தை https://innovate.mygov.in/
என்ற இணையதளத்தில் நாளை
19ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.