தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஜூலை, 25ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பு திருத்தத்துடன், மீண்டும் பல்கலை இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுஉள்ளது. விண்ணப்ப படிவம், விபரக்குறிப்பு ஆகியவற்றை, www.tnou.ac.in என்ற பல்கலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை.